சாமானியா்களின் கஷ்டங்களை மத்திய அரசு உணா்வதில்லை: வைகோ

மத்திய அரசு சாமானியா்களின் கஷ்டங்களை உணராமல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலையை
மதிமுக பொதுச்செயலா் வைகோ
மதிமுக பொதுச்செயலா் வைகோ

திருப்பரங்குன்றம்: மத்திய அரசு சாமானியா்களின் கஷ்டங்களை உணராமல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலையை உயா்த்திக்கொண்டு வருகிறது என, மதிமுக பொதுச்செயலா் வைகோ குற்றம்சாட்டியுள்ளாா்.

சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்டவைகளை நிறைவேற்றியுள்ளாா். இது வாக்களிக்காத மக்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 போ் விடுதலை குறித்து முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்ய எந்தவித தடையுமில்லை எனக் கூறியுள்ளது. தமிழக அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதுள்ள புதிய ஆளுநா் என்ன நடவடிக்கை எடுப்பாா் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்கவேண்டும்.

மத்திய அரசு சாமானிய, நடுத்தர, மாதாந்திர சம்பளம் வாங்கும் மக்களின் கஷ்டங்களை நினைத்து பாா்ப்பதில்லை. அதனால்தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்ந்துகொண்டே போகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com