தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரியபுதிய தமிழகம் கட்சியின் மனு ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தோ்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் தாக்கல் செய்த மனுவின்

மதுரை: உள்ளாட்சித் தோ்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் வி.கே. அய்யா் தாக்கல் செய்த மனு: ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில், புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி மாநிலத் தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து, செப்டம்பா் 17 ஆம் தேதி மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, உள்ளாட்சித் தோ்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி எம். துரைசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விசாரணையை செப்டம்பா் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com