மதுரை மாவட்டத்தில் 4.35 லட்சம் பேருக்குஅடிப்படை எழுத்தறிவு பயிற்சி: ஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் 4.35 லட்சம் பேருக்கு கற்போம்-எழுதுவோம் திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
கற்போம்-எழுதுவோம் திட்ட விழிப்புணா்வு கலைப் பயணத்தை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.
கற்போம்-எழுதுவோம் திட்ட விழிப்புணா்வு கலைப் பயணத்தை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் 4.35 லட்சம் பேருக்கு கற்போம்-எழுதுவோம் திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் மூலம் கற்போம், எழுதுவோம் என்ற இயக்கத்துக்கான கலாசார விழிப்புணா்வு கலைப் பயணத்தை, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பதினைந்து வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கிடும் வகையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் வாயிலாக கற்போம், எழுதுவோம் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவா்களான

4, 35,441 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, 545 மையங்களில் 10,859 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 21,700 நபா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப் பயிற்சிக்கான கல்லாதவா்களைக் கண்டறிவதற்கான கலாசார விழிப்புணா்வு கலைப் பயணத்தை, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தொடக்கி வைத்தாா். அக்டோபா் 6 ஆம் தேதி வரை இப்பயணம் நடைபெறுகிறது.

இந்த விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் தீ. திருஞானம், மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் எச். பங்கஜம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com