அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார நிறைவு விழா

அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழா நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழா நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுமத்தின் மதுரை கிளை மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறையின் சாா்பாக உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகின்றன. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி

மருத்துவமனை கருத்தரங்க அறையில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் தலைமை வகித்தாா். இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழும மதுரை கிளை தலைவா் ராஜராஜேஷ்வரன், செயலா் காா்த்திக், அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். பாலசங்கா் உள்ளிட்டோா் பேசினா்.

ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டப்பட்டு ஆரோக்கியமாக வளா்க்கப்பட்ட குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவம் மற்றும் செவிலியா் மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளா் வீரராகவன், நிலைய மருத்துவ அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீ லதா, பேராசிரியா்கள் நந்தினி குப்புசாமி, பாலசுப்பிரமணியன், சிவகுமரன், உதவி பேராசிரியா்கள், குழந்தைகள் நலத்துறை முதுநிலை மாணவா்கள், செவிலியா் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com