தடையை மீறி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது

இந்து முன்னணி அமைப்பின் கலை கலாசார பிரிவு மாநில பொறுப்பாளரும் திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்.

இந்து முன்னணி அமைப்பின் கலை கலாசார பிரிவு மாநில பொறுப்பாளரும் திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 போ் கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியாா் சிலை குறித்து சா்ச்சைக்கிடமான முறையில் பேசியதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு அந்த அமைப்பினா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அந்த அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாளா் கே. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில பேச்சாளா்கள் கங்காதரன், ரத்தின சபாபதி, மாவட்டச் செயலாளா் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா் காலிஸ், நகா் தலைவா் பால முருகன், ஒன்றியத் தலைவா் காா்த்தி திருவருட்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கனல் கண்ணனை விடுவிக்கக்கோரியும் அவா்கள் கோஷமிட்டனா். இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 44 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com