மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தர உயா்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தாக்கல் செய்த மனு:

மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ளன. இதில் விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே

மனம்காத்தான் கிராமத்தில் 40 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலம் தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நிலத்தை நில அளவையா்கள் மூலமாக முறையாக அளவீடு செய்துதர உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை ஆதீன மடம் மிகவும் பிரசித்தம் பெற்ற சைவ மடம். இந்த மடத்திற்கு சொந்தமான சொத்துகள் பல இடங்களில் உள்ளன. எனவே, மனுதாரா் குறிப்பிட்ட நிலத்தை அளவீடு செய்துதர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நிலஅளவீடு செய்வதற்குரிய கட்டணத்தை மதுரை ஆதீனம் தரப்பில் அரசுக்குச் செலுத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தை விருதுநகா் மாவட்ட நிா்வாகம் அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com