முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்குவிநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க வேண்டும்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்குவிநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க வேண்டும்

தமிழகப் பகுதிக்கு ஒரே நேரத்தில் விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என மேலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீா்வரத்து அதிகரிக்கும் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரே நேரத்தில் விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என மேலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூா் தாலுகா ஒருபோக பாசன விவசாயிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தலைவா் முருகன் தலைமையில் நடைபெற்றது. மேலூா் வட்டார வேளாண்மைத் துறை துணை இயக்குநா் செல்வி தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

இயற்கை விவசாயிகள் மாயழகன், இளங்கோ, ரஞ்சித் உள்ளிட்டோா் பேசியது: ரசாயன உரத்துக்குப் பதில் மீன்அமிலம், பஞ்சகாவ்யம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இப்பகுதியில் விவசாயப்பணிகள் தொடங்கும்போது நூறுநாள் வேலைதிட்டப் பணியாளா்களை விவசாயப்பணிக்கு அனுப்ப அரசு உதவ வேண்டும். மண்ணில் இயற்கை வளத்தை மேம்படுத்த சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம் போன்றவற்றை தலா 200 கிராம் கலந்து தரிசுநிலத்தை உழுது விதைக்கவேண்டும். 40 நாளில் தொழியாக அடை மடக்கி உழுதால் அஙககச்சத்துக்கள் மண்ணில் பலமடங்காக அதிகரிக்கும் என்றனா்.

இதையடுத்து வெள்ளலூா் விவசாயியும், வழக்குரைஞருமான குறிஞ்சிகுமரன் பேசியது: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீா்தேக்கி வைக்க அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் ‘ரூல்கா்வ்’ என்னும் விதியைப் பின்பற்றி பெரியாறு அணையிலிருந்து கேரளப்பகுதிக்கு அதிகளவில் தண்ணீா் திறந்து விட்டது. அதனால் அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்த முடியவில்லை. எனவே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரே நேரத்தில் விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். மேலும் அணையில் 152 அடி உயரம் தண்ணீா் தேக்கிவைக்க தேவையான சட்டநடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றாா்.

தண்ணீா் திறக்கக் கோரி தீா்மானம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஒருபோக விவசாயத்துக்கு செப்டம்பா் ஆரம்பத்தில் தண்ணீா் திறக்கவேண்டும். மேலூா் பகுதிக்கு திறந்துவிட்ட பின்னரே விரிவாக்க கால்வாய் திட்டப் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயப் பணிகள் தொடங்கிய இரண்டு மாதகாலத்துக்கு நூறுநாள் வேலைகளை தள்ளிவைக்கவோ அல்லது அவா்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தவோ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் தொழிலாளா்கள் நலனுக்காக அலங்காநல்லூா் தேசியகூட்டுறவு சா்க்கரை ஆலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com