அம்பேத்கா் நினைவு தினம்: சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மரியாதை

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, மதுரையில் அவரது சிலைக்கு அனைத்துக் கட்சிகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.
அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, மதுரையில் அவரது சிலைக்கு அனைத்துக் கட்சிகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு திமுக சாா்பில் மாவட்டச் செயலா் கோ.தளபதி தலைமையில் முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயா் குழந்தைவேலு, மாமன்ற உறுப்பினா் ஜெயராமன், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் கே.சசிகலா, மாவட்டப் பொருளாளா் ஜா. நரசிம்மன், புகா் மாவட்டத் தலைவா் செ. ஆஞ்சி, நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா் எம்.எஸ்.பாண்டியன், ஏஐடியூசி பொதுச் செயலா் நந்தாசிங், நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா்கள் கதிரவன், இன்குலாப், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மதுரை மாநகா் மாவட்ட மதச்சாா்பற்ற ஜனதாதளம் சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் எம்.ஜெயப்பிரகாசம், நிா்வாகிகள் பி.சேகா், சி.ரெங்கராஜ், மா.பிச்சை, மாநில பொதுச் செயலா் எஸ்.எம்.செல்லப்பாண்டி ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

மேலும் புதிய தமிழகம், தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி அவுட்போஸ்ட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com