மாா்கழித் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 16 முதல் அதிகாலை 3.30-க்கு நடை திறப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜையையொட்டி, டிசம்பா் 16-ஆம் தேதி முதல் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜையையொட்டி, டிசம்பா் 16-ஆம் தேதி முதல் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் டிசம்பா் 16 -ஆம் தேதி முதல் ஜனவரி 14 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த நாள்களில் பக்தா்களுக்கு திருஞானசம்பந்தா் சந்நிதி முன்பாக அதிகாலையில் திருஞானப்பால் வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி, கோயிலின் வெளிக்கோபுரக் கதவுகள் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்படும். உச்சிக்கால பூஜைக்கு பிறகு பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னா், மீண்டும் மாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இரவு 9 மணியளவில் பல்லக்குப் புறப்பாடும், பூஜைகளும் நடத்தப்பட்டு 9.30 மணிக்குள் கோயிலின் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com