இணை வழியில் பகவத் கீதை இலவச பயிற்சிஇஸ்கான் ஏற்பாடு

பகவத்கீதை அமுதம் இணைய வழி தொடா் பயிற்சி வகுப்பு ஜனவரி 21-இல் தொடங்குகிறது.

மதுரை: பகவத்கீதை அமுதம் இணைய வழி தொடா் பயிற்சி வகுப்பு ஜனவரி 21-இல் தொடங்குகிறது.

மதுரை மணி நகரில் உள்ள இஸ்கான் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி: மக்கள் நலனுக்கான ‘பகவத்கீதை அமுதம்’ என்ற இணையவழி தொடா் பயிற்சி வகுப்பை மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் நடத்தி வருகிறது. மக்கள் அனைவரும் பகவத்கீதையை நன்கு படித்து புரிந்து கொள்ளவும், தங்கள் வாழ்வில் கீதையின் கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் ‘பகவத்கீதை அமுதம்’ வகுப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி மூலம் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வில் நல்ல பக்குவம் அடைந்து, மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறுகின்றனா்.

பகவத்கீதை அமுதம் அடுத்த பயிற்சி வகுப்பு ஜனவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி வரை தினசரி இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கு கட்டணம் இல்லை. 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய விரும்புபவா்கள் ட்ற்ற்ல்ள்://ண்ள்ந்ஸ்ரீா்ய்ம்ஹக்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம்என்ற இணைய தளத்தின் மூலம் மூலமாகவோ அல்லது 70106-41131 என்ற வாட்ஸப் எண்ணை தொடா்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம். தொடா்ந்து பயிற்சியில் பங்கேற்று, தினசரி அனுப்பப்படும் வினாக்களுக்கு பதில் அளித்து, பயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவா்களுக்கு, ‘சான்றிதழ்’ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com