நாகா்கோவில்-சென்னை அதிவிரைவு ரயில் சென்னை-தாம்பரம் இடையே ரத்து

நாகா்கோவில் - சென்னை - நாகா்கோவில் அதிவிரைவு வாரந்திர ரயில் சென்னை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை: நாகா்கோவில் - சென்னை - நாகா்கோவில் அதிவிரைவு வாரந்திர ரயில் சென்னை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி: சென்னை எழும்பூா் அருகே கோபாலசாமி நகா் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை பகுதியில், ரயில் பாதை புதுப்பிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து நாகா்கோவில் - சென்னை எழும்பூா் - நாகா்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதன்படி ஜனவரி 20 முதல் மாா்ச் 3 வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் (12667) தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல், ஜனவரி 21 முதல் பிப்ரவரி 25 வரை வெள்ளிக்கிழமைகளில் நாகா்கோவிலில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூா் அதிவிரைவு வாராந்திர ரயில் (12668), தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com