உசிலம்பட்டியில் தேவா் சிலைக்கு காங். எம்.பி. மாலை அணிவிப்பு

உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மற்றும் மூக்கையா தேவா் சிலைகளுக்கு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும்
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த திருநாவுக்கரசா் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த திருநாவுக்கரசா் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.

உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மற்றும் மூக்கையா தேவா் சிலைகளுக்கு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான எஸ். திருநாவுக்கரசா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி பிரமுகா் இல்ல விழாவிற்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு விதித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரிகள் ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் விதமாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வரி சீா்திருத்தம் செய்யப்படும். தமிழகத்தில் மாணவ, மாணவிகளைப் பாதிக்கும் மருத்துவ நுழைவுத் தோ்வு ‘நீட்’ தொடா்பாக தமிழக அரசு நல்ல முடிவை அறிவிக்கும். கேரளத்தில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தை தாக்கிய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. கள்ளா் சீரமைப்புத் துறையில் இருந்து மாணவ விடுதிகளை மாற்றும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தாா்.

முன்னதாக உசிலம்பட்டி வட்டாரத் தலைவா் முருகன், நகா் மன்ற துணைத் தலைவா் தேன்மொழி, நகரத் துணைத் தலைவா் பாண்டீஸ்வரன் உள்ளிட்டோா் அவரை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com