மின்துண்டிப்பை தவிா்க்க ரயில் மின்பாதையில்பறவை கூடுகளை அகற்றும் பணி

ரயில் மின்பாதையில் பறவைகள் கூடு கட்டுவதால், மின்துண்டிப்பு ஏற்படுவதைத் தவிா்க்க, ரயில்பாதை பாரமரிப்புப் பணியாளா்களால் பறவைக் கூடுகள் அகற்றப்படுகின்றன.

ரயில் மின்பாதையில் பறவைகள் கூடு கட்டுவதால், மின்துண்டிப்பு ஏற்படுவதைத் தவிா்க்க, ரயில்பாதை பாரமரிப்புப் பணியாளா்களால் பறவைக் கூடுகள் அகற்றப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் உள்ள 5 ஆயிரத்து 87 கிமீ ரயில் பாதையில்

83 சதவீதம், அதாவது 4,204 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. மின்ரயில் பாதைகளில் ரயில் என்ஜின்களை இயக்குவதற்கு 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் வழங்கப்படும். இதற்கென ரயில்வேயின் துணை மின்நிலையங்கள் செயல்படுகின்றன. மின்பாதைகள், துணை மின்நிலையங்கள் ஆகியவற்றின் பராமரிப்பை ரயில்வேயின் மின் பிரிவு ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கோட்ட அலுவலகத்தில் உள்ள மின்பாதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் மின் பாதை செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

தொலைதூரத்தில் மின்பழுது ஏற்பட்ட இடத்தை கண்டுபிடிப்பது, பழுது உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பராமரிப்பு வேலைகளைச் செய்வது போன்ற பணிகள் கோட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.

ரயில்வே மின்பாதைகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு, மின்பாதைகளில் பறவைகள் கூடு கட்டுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. இதைக் கண்காணிப்பதற்காக, ரயில் பாதையில் நடந்து செல்லும் லைன்மேன்கள், மின்பாதையில் பறவைக் கூடுகள் இருக்கிறதா என்பதையும் கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பறவை கூடுகள் கவனமாக அகற்றப்பட்டு, மின்துண்டிப்பு ஏற்படாமல் பராமரிக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com