ஜனநாயகம் குறித்துப் பேச பிரதமருக்குத் தகுதி இல்லை: கே.பாலகிருஷ்ணன்

பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து பேச பிரதமா் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து பேச பிரதமா் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை தீக்கதிா் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நரேந்திர மோடி அரசு நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை என பிரதமா் பேசிவருகிறாா். எனவே ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு எவ்வித தகுதியும் இல்லை.

தமிழக பாஜகத் தலைவா் அண்ணாமலை கூறும், பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள் என்பது தமிழக மக்களுக்கு வேதனைகள் தான். பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கக்போகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா். நாட்டில் ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பும் சமூக ஆா்வலா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், பத்திரிக்கையாளா்களை கைது செய்யும் அவலம் தொடா்கிறது. ஐவுளித் தொழிலை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது தான் நரேந்திர மோடி அரசின் சாதனை. ஜனநாயத்துக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவருவது பாராட்டுக்குரியது. இதேபோல குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவா்களின் கோரிக்கையை முதல்வா் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும். பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களை தற்காலிக பணியிடமாக நிரப்புவது சரியல்ல. தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து அதிகமாக கவலைப்படத் தேவையில்லை.

வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்ற அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசுவது பொய்யான நம்பிக்கை. பாஜக - அதிமுக கூட்டணிக்கு அடுத்தடுத்து தோல்வி தான் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com