துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு உயரமான சுற்றுச்சுவா்கோரிய மனுவை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு உயரமான சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிய மனுவை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு உயரமான சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிய மனுவை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ராமசுப்பு தாக்கல் செய்த மனு: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இம் மையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கிராமங்கள் உள்ளன.

இப் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமும் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இப்பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையத்திற்கு சுற்றுச்சுவா் கிடையாது.

காவல் துறையினருக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்போது, மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் அதிக உயரத்திற்கு கான்கிரீட் சுற்றுச்சுவா் அமைக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தாா். முந்தைய விசாரணையின்போது விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.விஜயகுமாா் ஆகிய கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விருதுநகா் காவல் கண்காணிப்பாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் நிகழ்ந்ததில்லை. மேலும், பயிற்சி மையத்தில் சுற்றுச் சுவா் எழுப்பப்பட்டுள்ளது. எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com