மாட்டுத் தாவணி மீன் சந்தைக்கு செல்லமூடப்பட்ட வழியை திறக்க வலியுறுத்தல்

மதுரை, மாட்டுத் தாவணி மீன் சந்தைக்குச் செல்ல மூடப்பட்ட வழியை திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை, மாட்டுத் தாவணி மீன் சந்தைக்குச் செல்ல மூடப்பட்ட வழியை திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட கரிமேடு பகுதியில் மீன் சந்தைச் செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, கரோனா தொற்று காலத்தில் மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி சாா்பில் மீன் சந்தை அமைக்கப்பட்டது. இந்த மீன் சந்தையில் ராமேசுவரம், தூத்துக்குடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த மீன் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் மீன்களை வாங்க வந்தனா். ஆனால், மாட்டுத் தாவணி பேருந்து நிலையப் பகுதியிலிருந்து மீன் சந்தைக்குச் செல்லும் வழி இரும்புக் கதவுகளால் மூடப்பட்டதால், மீன் வாங்கச் செல்வோா் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பேருந்து நிலையம் வழியாக மீன் சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் இரும்புக் கதவுக்கு கீழே ஆபத்தான முறையில் தரையில் ஊா்ந்தும், சுவா்களைத் தாண்டியும் மீன் சந்தைக்குள் செல்கின்றனா். அப்போது சிலருக்கு காயமும் ஏற்படுகிறது.

எனவே, மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மீன் சந்தைக்குச் செல்லும் பாதையை திறந்து விட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com