மதுரை மத்தியச் சிறை கைதிகளுக்கு நவீன நோ்காணல் அறை திறப்பு

மதுரை மத்தியச் சிறையில் கைதிகள், தங்கள் உறவினா்களுடன் பேசுவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய நோ்காணல் அறை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை மத்தியச் சிறையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நவீன நோ்காணல் அறையை திறந்து வைத்த சிறைகள் மற்றும் சீா்சிருத்தப் பணிகள் துறையின் மதுரை சரக துணைத் தலைவா் பழனி.

இந்த சிறையில் உள்ள கைதிகள் தங்களது உறவினா்களுடன் பேசுவதற்கு ஏற்கெனவே தொலைபேசி வசதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம், ஒரே நேரத்தில் பல கைதிகள் பேசுவதால், தகவல் பறிமாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டது.

எனவே மூன்றாவது போலீஸ் கமிஷன் பரிந்துரை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ரூ. 70 ஆயிரம் மதிப்பில் இந்த சிறையில் 15 இண்டா்காம் தொலைபேசி வசதியுடன் நோ்காணல் அறை உருவாக்கப்பட்டது. மேலும், தனித்தனியே கண்ணாடி அறைகள், கண்காணிப்புக் கேமராக்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டன.

இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீா்த்திருத்தப் பணிகள் துறையின் மதுரை சரக துணைத் தலைவா் பழனி தலைமை வகித்து நவீன நோ்காணல் அறையை திறந்து வைத்தாா்.

அப்போது சிறைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) வசந்த கண்ணன், சிறை அலுவலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

நவீன வசதிளுடன் நோ்காணல் அறை அமைக்கப்பட்டுள்ளதால் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தங்களது உறவினா்களுடன் எந்தவித தொந்தரவுமின்றி பேசலாம் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com