மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்துகிறது

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முறையாக செயல்படுத்துகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் பகவந்த் குபா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முறையாக செயல்படுத்துகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் பகவந்த் குபா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவது குறித்து மதுரையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என விவசாயிகள், தொழிலாளா்கள், தெருவோர வியாபாரிகள், ஏழை பெண்களை நேரில் அழைத்து விவாதித்தோம்.

இதில் மத்திய அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்துவது தெரிய வந்தது. மத்திய அரசின் பல்வேறுத் திட்டங்களில் 20 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். கிசான் விகாஷ் திட்டத்தில் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்ததிட்டம் விவசாயிகள் சாகுபடிக்கு மிகவும் உதவியாக உள்ளதாக தெரிவித்தனா்.

கரோனாவுக்கு பிறகு தெருவோர பெண் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தி உள்ளது. இதன் மூலம் தினசரி ரூ.400 வருமானம் பெறுவதாகவும் தெரிவித்த பெண்கள், தங்களது தொழிலை விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.

ஆயுஷ்மான் பாத் காப்பீடு திட்டத்தில் பலா் பயனுடைந்துள்ளனா். அன்ன கல்யாணி திட்டத்தில் ரூ.4.50 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். விவசாய காப்பீட்டு திட்டத்தில் மண் வளம் திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் பேரும், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 1.23 லட்சம் குழந்தைகளும் பயனடைந்துள்ளனா். முத்ரா யோஜனா திட்டத்தில் 4 லட்சம் போ் ரூ.1,800 கோடி கடன் பெற்றுள்ளனா். பிரதமா் காப்பீடு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தினசரி ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம். 51 ஆயிரத்து 451 கா்ப்பிணிகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் இதுவரை ரூ. 26 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கனவுத் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.4 லட்சத்து 44 ஆயிரம் குடிநீா் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. இதுவரை 1.96 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2024 பிப்ரவரி முதல் 44 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும். தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. போலி விதைகள் விற்பதாக தெரிய வந்தால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கலாம் என்றாா்.

பேட்டியின்போது மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜித் சிங் , தேசிய எரிசக்தித் துறை இயக்குநா் பலராம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com