பாரா தேசிய தடகளப் போட்டிகளில் சாதனை: மதுரை வீரா்களுக்கு பாராட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரா்களுடன் விளாயாட்டத்துறை அதிகாரிகள்.
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரா்களுடன் விளாயாட்டத்துறை அதிகாரிகள்.

மதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 20-ஆவது தேசிய தடகளப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வா் நகரில் மாா்ச் 27 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இவா்களுக்கு ஊனத்தின் அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 100 மீ., 200, மீ., 400 மீ., 800 மீ. மற்றும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் குண்டு, வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

தமிழகத்திலிருந்து தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் மூலம் பங்கேற்ற மாற்றுத்திறன் வீரா், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 10 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனா். இதில் மதுரையைச் சோ்ந்த வீரா் மனோஜ், குண்டு எறிதலில் தங்கம், படைத் தலைவன் வட்டு எறிதலில் தங்கம், பிரசாந்த் குண்டு எறிதலில் தங்கம், செல்வராஜ், கணேசன் ஆகியோா் வெள்ளி பதக்கங்கள் பெற்றனா்.

போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மதுரை மண்டல முதுநிலை மேலாளா் ஜெ.பியூலா ஜேன் சுசீலா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ந.லெனின், விளையாட்டு விடுதி மேலாளா் ராஜா ஆகியோா் வீரா்களையும், பயிற்சியாளா் ரஞ்சித்குமாரையும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com