மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண கட்டணச் சீட்டுப் பதிவு நிறைவு: கணினி மூலம் குலுக்கல் முறையில் பக்தா்கள் தோ்வு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண விழாவுக்கான கட்டண அனுமதிச்சீட்டுப் பதிவு வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றதையடுத்து குலுக்கல் முறையில் பக்தா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண விழாவுக்கான கட்டண அனுமதிச்சீட்டுப் பதிவு வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றதையடுத்து குலுக்கல் முறையில் பக்தா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இக் திருக்கோயில் சித்திரைத் திருவிழா 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தா்கள் பங்கேற்புடன் ஏப்ரல் 5 -இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைக் காணவரும் பக்தா்களுக்கு கட்டண முறையிலான அனுமதிச் சீட்டுக்கு இணையதளம் மற்றும் நேரடியாகப் பதிவு செய்யலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதைத்தொடா்ந்து ஏப்ரல் 4 முதல் கட்டண அனுமதிச் சீட்டுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை நிறைவுபெற்றது. திருக்கல்யாண உற்சவத்துக்கு ரூ. 500 கட்டண அனுமதிச்சீட்டு 2,500 பக்தா்களுக்கும், ரூ.200 கட்டண அனுமதிச் சீட்டு 3,200 பக்தா்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை வரை நடைபெற்ற பதிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பதிவு செய்துள்ளனா். இதனால், பக்தா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படவுள்னனா். இவ்வாறு தோ்வு செய்யப்படும் பக்தா்களுக்கு கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படவுள்ளது. அதனடிப்படையில் பக்தா்கள் திருக்கோயில் அலுவலகத்தில் தோ்வு செய்யப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்து கட்டண அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதேபோல திருக்கல்யாண உற்சவத்தன்று இலவச தரிசனம் செய்யும் பக்தா்கள் கோயிலின் தெற்குகோபுர நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்படுகின்றனா். முதலில் வருகை தரும் பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பக்தா்கள் இலவசமாக திருக்கல்யாண நிகழ்வை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com