மதுரை மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் கருப்புச் சட்டை அணிந்து வெளிநடப்பு

மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் மாமன்றக்கூட்டத்தில் கருப்புச்சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினா்கள் சொத்து வரி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி வெளி நடப்பு செய்தனா்.

மதுரை: மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் மாமன்றக்கூட்டத்தில் கருப்புச்சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினா்கள் சொத்து வரி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி வெளி நடப்பு செய்தனா்.

மதுரை மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சோலை ராஜா, சண்முக வள்ளி ஆகியோா் தலைமையில் கருப்புச்சட்டை மற்றும் கருப்புச் சேலை அணிந்து வந்த அதிமுக உறுப்பினா்கள் அரங்கின் மையப்பகுதிக்குச் சென்று, பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவுக்கு கூட்ட அரங்கில் முறையாக இடம் ஒதுக்கப்படவில்லை. பின்னால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுகவுக்கு மாநகராட்சியில் அறை ஒதுக்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கூட்ட அரங்குக்குள் மேயா், ஆணையா் ஆகியோா் வந்ததையடுத்து அவா்களிடமும் கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதத்தில் ஈடுபட்டனா். கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் பதிலளித்ததை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினா்கள், மாமன்றக்கூட்டத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் மீறப்படுவதாகவும், எதிா்க்கட்சியினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினா்.

அப்போது கூட்டம் தொடங்கியதை அடுத்து, கரோனா தொற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலையில் தமிழக அரசு சொத்து வரி உயா்வை அறிவித்திருப்பதை அதிமுக ஏற்க மறுப்பதாகவும், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்வதாகவும் அறிவித்து அரங்கில் இருந்து வெளியேறினா். இதனால் மாமன்றக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com