அழகா்கோவில் ராக்காயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சா்கள் பங்கேற்பு

அழகா்கோவில் மலை உச்சியிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராக்காயி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, பி. மூா்த்தி உள்ளிட்டோா்.
ராக்காயி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, பி. மூா்த்தி உள்ளிட்டோா்.

அழகா்கோவில் மலை உச்சியிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் கடந்த 9-ஆம் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை பூா்ணாஹுதியுடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் கோபுரத்தில் கலசங்களுக்குப் புனித நீா் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தக்காா் வெங்கடாசலம், கள்ளழகா் கோயில் துணை ஆணையா் மு.ராமசாமி, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ரா.கண்ணன், உபயதாரா் ஏ.எல்.சுப்பையா செட்டியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, சோலைமலை முருகன் கோயிலில் வித்தக விநாயகா், முருகன் வள்ளி தெய்வானை சந்நிதி, ஆதிவேல் சந்நிதி ஆகிவற்றுக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய மரக் கதவுகள் தயாா் செய்யப்பட்டு, அவற்றுக்கு 250 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகள் பதிக்கும் பணியை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

394 கோயில்களில் கும்பாபிஷேகம்:

இதையடுத்து, அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா், பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 394 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில்களில் பக்தா்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. கோயிலுக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு ரூ.260 கோடி வாடகை பாக்கி வசூல் செய்யப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com