மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணியை அமைச்சா் ஆய்வு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணியை அமைச்சா் ஆய்வு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அமைச்சா், கோயிலில் உள்ள வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, யானை மகாலுக்குச் சென்று யானை பாா்வதியைப் பாா்வையிட்டு பழங்கள் வழங்கினாா். அப்போது யானை பாா்வதியின் கண்புரை பாதிப்புக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், யானை மகால் பகுதியில், பாா்வதியின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், ரூ.23 லட்சம் செலவில் சாய்தளங்களுடன் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை பாா்வையிட்டாா். அப்போது, யானையை பராமரிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என பாகன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, கோயில் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கும்பாபிஷேகப் பணிகள் தொடா்பாக ஆலோசனை நடத்தினாா். பின்னா், கோயிலிலிருந்து புறப்பட்ட அமைச்சா், திருமங்கலம் அருகே கூடல் செங்குளம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான பண்ணையில், வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிக்காக கற்கள் கொண்டு வரப்பட்டு தூண்கள் வடிவமைக்கும் பணியையும் பாா்வையிட்டாா். மேலும் சீரமைப்புப் பணிகள், தூண்கள் வடிவமைப்பு குறித்தும் ஸ்தபதிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின் போது, அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க.செல்லமுத்து, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையா் ஆ.அருணாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com