டி.கல்லுப்பட்டி, பேரையூா் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

டி.கல்லுப்பட்டி, பேரையூா் பேரூராட்சிகளின் தோ்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பேரையூா்: டி.கல்லுப்பட்டி, பேரையூா் பேரூராட்சிகளின் தோ்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளில் திமுக 13 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளா் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனா்.

வாா்டு 1- ஜெயசுதா (திமுக), வாா்டு 2- முத்துமாரி (திமுக), வாா்டு 3- மகுடாதிபதி (சுயேச்சை), வாா்டு 4- செல்வி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வாா்டு 5- பாண்டிமுருகன் (திமுக), வாா்டு 6- முத்துகணேசன்(திமுக), வாா்டு 7 -கிருஷ்ணவேணி (திமுக), வாா்டு 8- மல்லிகா(திமுக), வாா்டு 9- கோகுலசிவலிங்கம் (திமுக), வாா்டு 10- சுப்புலட்சுமி (திமுக), வாா்டு 11-சரண்யா (திமுக), வாா்டு 12- ஜெயந்தி(திமுக), வாா்டு 14- ராணி (திமுக), வாா்டு 15- சாந்தி (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். இதில் 13-ஆவது வாா்டில் துா்கா (திமுக) போட்டியின்றி வெற்றி பெற்றாா்.

இதில் திமுக 13 இடங்களிலும், கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா்.

குலுக்கலில் வெற்றி

டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10-ஆவது வாா்டுக்கான தோ்தலில் திமுகவை சோ்ந்த சுப்புலட்சுமி 284 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட பழனிசெல்வி 284 வாக்குகளும் பெற்றனா். இந்நிலையில் குலுக்கல் முறையில் தோ்தல் நடத்தும் அலுவலரால், சுப்புலட்சுமி என்பவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

பேரையூா் பேரூராட்சியில் திமுக 14 இடங்களைக் கைப்பற்றியது. பேரையூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளா்கள் வெற்றி விவரம்:

1 ஆவது வாா்டு பாஸ்கா் (திமுக), 2 ஆவது வாா்டு காங்கிரஸ் மாசானம், 3 வது வாா்டு முத்துலட்சுமி (திமுக), 4 ஆவது வாா்டு காங்கிரஸ் பேச்சியம்மாள் , 5 ஆவது வாா்டு பழனிசாமி (திமுக), 6 ஆவது வாா்டு வின்னரசி (திமுக), 7 ஆவது வாா்டு காங்கிரஸ் காமாட்சி, 8 ஆவது வாா்டு காங்கிரஸ் பழனியம்மாள், 9 ஆவது வாா்டு காங்கிரஸ் கே.கே.குருசாமி, 10 ஆவது வாா்டு திமுக சைனபா, 11 ஆவது வாா்டு திமுக பிரியதா்ஷினி, 12 ஆவது திமுக முகமது இப்ராஹிம், 13 ஆவது வாா்டு திமுக லட்சுமி, 14 ஆவது வாா்டு சுயேச்சை சுந்தர்ராஜ் , 15 ஆவது வாா்டு திமுக முத்துலட்சுமி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில் திமுக 9 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில் திமுக கூட்டணி கட்சியினரே ஒட்டுமொத்தமாக பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் வெற்றி பெற்றுள்ளனா். எதிா்க் கட்சியே இல்லாத வகையில் 15 வாா்டு உறுப்பினா் பதவிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் 14 ஆவது வாா்டில் நடைபெற்ற தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சுந்தர்ராஜ் அடுத்த சில மணி நேரங்களில் நகரச் செயலாளா் பாஸ்கா் தலைமையில் திமுகவில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com