தமிழகத்தில் 5 வானொலி நிலையங்களை மூடுவதை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் ஐந்து வானொலி நிலையங்களை மூடும் முடிவை பிரசாா் பாரதி கைவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் ஐந்து வானொலி நிலையங்களை மூடும் முடிவை பிரசாா் பாரதி கைவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரசாா் பாரதி ‘ஒரு மாநிலம், ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையம்‘ என்ற கொள்கையை பொங்கல் தினம் முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாக அறியப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, புதுச்சேரி வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

அவை உள்ளூா் பண்பாட்டுக்கான முக்கியத்துவம், மாநில மொழி வளா்ச்சி, நாட்டுப்புறக் கலைகள், அடித்தள திறன்களை அடையாளம் காணுதல், பன்மைத்துவம் இப்படி பெரும் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் சென்னை தவிா்த்த ஐந்து வானொலி நிலையங்களை தரமிறக்கி ‘நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள்‘ என்பதை ‘ஒலிபரப்பு நிலையங்களாக‘ மட்டும் மாற்றுவதாக வந்துள்ள செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன. வானொலி நிலையங்களின் செயல்பாடு முடக்கம், ஊழியா் பாதிப்பு, வேலை வாய்ப்பு இழப்பு ஆகிய விளைவுகளை உருவாக்கும். ஒற்றைப்பண்பாடு என்ற நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே இம்முடிவு எடுக்கப்படுகிறது. எனவே இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com