தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் தோல்வியடைந்து விட்டது:பாஜக கூட்டுறவுப்பிரிவு குற்றச்சாட்டு

தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் தோல்வியடைந்து விட்டது என்று பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநிலச் செயலா் கே. மாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் தோல்வியடைந்து விட்டது என்று பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநிலச் செயலா் கே. மாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளாா்.

பாஜகவின் மாநில கூட்டுறவுப் பிரிவு சாா்பில், பன்னாட்டு கூட்டுறவு தின விழா மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், பாஜக மாநில கூட்டுறவுப் பிரிவு தலைவருமான கே. மாணிக்கம் தலைமை வகித்தாா். பாஜக மாநில பொதுச் செயலா் ராம.சீனிவாசன், பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் பி. சரவணன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

விழாவுக்குப் பின்னா் மாநில கூட்டுறவு பிரிவுத் தலைவா் மாணிக்கம் செய்தியாளா்களிடம் கூறியது: கூட்டுறவுத் திட்டங்களுக்கு நபாா்டு வங்கி மூலம் மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக தவறான தகவலை தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகள் மூலம் மத்திய அரசு மக்களுக்கு வழங்கும் 5 கிலோ அரிசியையும் கூட மாநில அரசே வழங்குவதாகக்கூறி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் விரைவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். தமிழகத்தில் கூட்டுறவுத்துறைகள் தோல்வியடைந்து விட்டன. பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி, அதிமுக மட்டுமின்றி எந்தக்கட்சியில் இருந்து யாா் வந்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது என்றாா்.

பாஜக மாநில பொதுச்செயலா் ராம. சீனிவாசன்: அதிமுக பாஜகவின் கூட்டணிக் கட்சியாக உள்ளது. அதிமுகவில் யாா் தலைவராக இருக்க வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது. கூட்டுறவுத் துறையில் தவறுகள் நடந்தால் அதை பாஜக தட்டிக்கேட்கும். கூட்டுறவில் சுண்டல், அரிசி, பருப்பு என அனைத்துப்பொருள்களும் முறைகேடாக வெளிச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com