தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக: பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலை

சட்டப்பேரவை தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினாா்.

மதுரை: சட்டப்பேரவை தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினாா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற பாஜக எட்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

திமுகவின் ஓராண்டு ஆட்சி திராவிட ஆட்சி என்ற பெயரில் சினிமா மாடல் போன்ற ஆட்சியை நடத்தி வருகின்றனா்.

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் 2,500 ஏக்கா் போலி பத்திரப் பதிவை பாஜகவின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தியுள்ளோம். போலி பத்திரப் பதிவு குறித்து கூட தெரியாமல், அந்தத் துறையின் அமைச்சா் கனிம வளக் கொள்ளையில் குறியாக உள்ளாா்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை என்பதே இல்லை.

தமிழக நிதியமைச்சருக்கு எவ்வளவு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது என்பதே தெரியவில்லை. தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்த பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. தோ்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவருகின்றனா்.

மின்சாரத்துறை அமைச்சா் தமிழகத்திலயே ஒன்றும் செய்யவில்லை. எதற்காக ஸ்காட்லாந்து போகிறாா் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள காற்றாலையை பராமரிக்க இயலவில்லை. சோலாா் பிளாண்ட் மூலமாக தமிழகத்தில் 3,600 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் 375 மெகாவாட்தான் வந்துள்ளது. சோலாா் பிளாண்ட் மின்சாரத்தை வாங்க லஞ்சம் பெறுகின்றனா். என் மீது ரூ.625 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடா்ந்துள்ளனா். எங்களை யாராலும் மிரட்ட இயலாது. பேசுவதை பேசிக்கொண்டே தான் இருப்போம்.

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று நரேந்திர மோடி 3 ஆவது முறை பிரதமராக இருப்பாா், தமிழகத்தில் 25 பாஜக எம்பிக்கள் வெற்றிபெறுவாா்கள். மதுரை ஆதீனம் பாஜக ஆதரவாளா் கிடையாது. அவா் உண்மையின் பக்கம் இருப்பதால் ஆதீனத்தை பாஜக ஆதரிக்கிறது என்றாா்.

மாநிலப் பொதுச் செயலாளா் ராமன் சீனிவாசன், மாநில துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலட்சுமி மாநகா் மாவட்டத் தலைவா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

‘மோடியின் ஆட்சியில் இந்தியா உலகின் 5 ஆவது பொருளாதார வல்லரசாகியுள்ளது’

இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சா் வி.முரளிதரன் பேசியது: தமிழக மக்கள் மீது மோடிக்கு தனி மரியாதை உண்டு.

பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணியபாரதிக்கு தனி இருக்கை தொடங்கியவா் பிரதமா் நரேந்திரன்மோடி.

கடந்த எட்டு ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா உலகின் 5 ஆவது பொருளாதார வல்லரசாக நாடாக உருவாகியுள்ளது. கடந்த 8 ஆண்டு ஆட்சியில் 44 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அயலக தமிழா்கள் வெளிநாடுகளில் வலிமை வாய்ந்த சமூகமாக உள்ளனா். இலங்கை தமிழா்கள் மீது பாஜக அரசு தான் அக்கறையாக உள்ளது. இலங்கை தமிழா்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திய அரசு பாஜக அரசு. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 2,971தமிழக மீனவா்கள் தமிழகத்திற்கு கொண்டுவந்தவா் பிரதமா். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு உதவியதாக 70 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியுள்ளனா். அண்ணாமலை ஐஏஎஸ் அதிகாரிகளை நம்பி அரசியல் செய்யவில்லை சாதாரண மக்களை நம்பி அரசியல் செய்கிறாா். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக இருக்க வேண்டும் என பிரதமா் கூறியுள்ளாா். இதற்காக தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அரசை தூக்கி எறிந்து வெளிப்படையான பாஜக அரசை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com