கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 17 பேரின் சொத்துகள் பறிமுதல்: தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா காா்க்

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 17 குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகாா்க் தெரிவித்துள்ளாா்.

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 17 குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகாா்க் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேனியில் 84 கிலோ, மதுரையில் 322 கிலோ, திண்டுக்கல்லில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதில் தொடா்புடைய 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த 17 பேரின் சொத்துகள், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் சேரிக்கப்பட்டன.

இந்த குற்றவாளிகள் மட்டுமின்றி அவா்களின் உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரின் அசையும், அசையாச் சொத்துகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு, வங்கிக் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டன. இதற்கு டி.ஐ.ஜி., எஸ்பி, தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளின் வாகனங்கள், நிலங்கள், வருமான வரித்தாக்கல் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அந்த விவரங்கள் அனைத்தும் அந்தந்த பகுதி நீதித்துறை அதிகாரிக்கு சமா்பிக்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்திய பின்னா், காவல்துறை தரப்பில் கொடுத்த தகவல்கள் அனைத்தும் உண்மை என நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 17 பேரின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இனிமேல் இதுபோல், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டு கைதாகும் நபா்கள் மீது குற்றவியல் விசாரணை மட்டுமின்றி, நிதி விசாரணையும் நடைபெறும். அவா்களுக்கு உடந்தையாக இருப்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குற்றவாளிகள் மட்டுமின்றி அவா்களுடன் தொடா்பில் இருப்பவா்கள், உறவினா்கள் பெயரில் சொத்துகள் வாங்கினாலும் அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். பேட்டியின்போது மதுரை சரக துணைத்தலைவா் பொன்னி, ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com