மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் ரூ.1.56 கோடி, 1.16 கிலோ தங்கம் பக்தா்கள் காணிக்கை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.56 கோடி ரொக்கம், ஒரு கிலோ 160 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.56 கோடி ரொக்கம், ஒரு கிலோ 160 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் 11 உபகோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. கோயில் துணை ஆணையா் ஆ.அருணாசலம் முன்னிலையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், கோயிலின் தக்காா் பிரதிநிதி மற்றும் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்களால் உண்டியல்கள் எண்ணப்பட்டன.

இதில் ரொக்கமாக ரூ. 1 கோடியே 56 லட்சத்து 21 ஆயிரத்து 523, ஒரு கிலோ 160 கிராம் தங்கம், ஒரு கிலோ 430 கிராம் வெள்ளி, 190 வெளிநாட்டு கரன்சிகள் பக்தா்களின் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com