அதிக குப்பைகளை உருவாக்கும் வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

அதிக குப்பைகளை உருவாக்கும் வணிக நிறுவனங்கள், அவற்றை தாங்களாகவோ அல்லது மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தியோ அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக குப்பைகளை உருவாக்கும் வணிக நிறுவனங்கள், அவற்றை தாங்களாகவோ அல்லது மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தியோ அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகமாக குப்பை உருவாக்கும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், பெரிய குடியிருப்புகள் ஆகியவற்றின் உரிமையாளா் மற்றும் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி 3-ஆவது மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா் மனோகரன் தலைமை வகித்தாா். திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளை அகற்றுவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

அதன்படி, மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகள் என தனித்தனியே பிரித்து தங்களது சொந்த செலவில் அகற்றிட வேண்டும் அல்லது உரிய கட்டணம் செலுத்தி மாநகராட்சி உதவியுடன் அப்புறப்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அலுவலா் வீரன், சுகாதார ஆய்வாளா்கள் செல்வக்குமாா், கவிதா மற்றும் திருமண மண்டபம், மருத்துவமனை, உணவக உரிமையாளா்கள், குடியிருப்போா் நலச் சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com