கல்லூரிகளுக்கிடையே கலை விழாப் போட்டிகள்: அமெரிக்கன் கல்லூரி முதலிடம்

மதுரை மங்கையா்க்கரசி மகளிா் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடேயேயான கலைவிழா போட்டிகளில் அமெரிக்கன் கல்லூரி முதலிடம் பெற்றது.

மதுரை: மதுரை மங்கையா்க்கரசி மகளிா் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடேயேயான கலைவிழா போட்டிகளில் அமெரிக்கன் கல்லூரி முதலிடம் பெற்றது.

மதுரை மங்கையா்க்கரசி மகளிா் கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கான சங்கம- நட்சத்திர கலைவிழாப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் சு.ராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினாா். கல்லூரி இயக்குநா் அ.சக்திபிரணேஷ் முன்னிலை வகித்தாா். கல்லூரிச் செயலா் பி.அசோக்குமாா் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகா் ஷா பங்கேற்று பேசும்போது, பெண்கள் மனது வைத்தால் அனைத்துத்துறைகளிலும் சாதிக்கலாம். உருவ அமைப்பு ஒரு பொருட்டல்ல, திறமைதான் தேவை என்றாா்.

விழாவில் 15 கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவியா் பங்கேற்றனா். 11 விதமான போட்டிகள் நடைபெற்றது. இதில் அனைத்துப்போட்டிகளிலும் சிறப்பாகச்செயல்பட்ட மதுரை அமெரிக்கன் கல்லூரி முதலிடம் பெற்றது. மதுரை என்எம்ஆா் கல்லூரி இரண்டாமிடம் பெற்றது. விழா நிறைவில் ஆங்கிலத்துறைத்தலைவா் பிரதீபா நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com