பிரதமா் பங்கேற்ற விழா: மதுரை ரயில் நிலையத்தில் காணொலியில் ஒளிபரப்பு

பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் பங்கேற்ற புதிய திட்டங்கள் தொடக்க விழா, காணொலிக் காட்சியாக மதுரை ரயில் நிலையத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மதுரை: பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் பங்கேற்ற புதிய திட்டங்கள் தொடக்க விழா, காணொலிக் காட்சியாக மதுரை ரயில் நிலையத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மதுரை - தேனி புதிய அகல ரயில் பாதை மற்றும் புதிய ரயில் தொடக்க விழாவும், மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சென்னையில்

வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த திட்டங்களை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்வானது, மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் ஆறாவது நடைமேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், செல்லூா்

கே. ராஜூ ஆகியோா் கலந்துகொண்டனா். மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை - தேனி சிறப்பு ரயிலை பிரதமரோடு இணைந்து கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த், முதுநிலை கோட்ட வா்த்தக மேலாளா் ரதிப் பிரியா, முதுநிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளா் ராஜேஷ் சந்திரன், முதுநிலை கோட்ட பொறியாளா் நாராயணன், முதுநிலை கோட்ட தொலைத்தொடா்பு பொறியாளா் ராம் பிரசாத், கட்டுமானப் பிரிவு இணை முதன்மை பொறியாளா் நந்தகோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com