‘தமி​ழ​கத்​தில் வணிக வரி​யாக ரூ.1 லட்​சத்து 4 ஆயி​ரம் கோடி வசூல்’

தமி​ழ​கத்​தில் வணிக வரி​யாக ரூ.1 லட்​சத்து 4 ஆயி​ரம் கோடி வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது என்று வணி​க​வ​ரித் துறை அைமச்​சா் பி.மூா்த்தி தெரி​வித்​தாா்.

தமி​ழ​கத்​தில் வணிக வரி​யாக ரூ.1 லட்​சத்து 4 ஆயி​ரம் கோடி வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது என்று வணி​க​வ​ரித் துறை அைமச்​சா் பி.மூா்த்தி தெரி​வித்​தாா்.

மதுரை கிழக்கு சட்டப் பேர​ைவத் தொகு​திக்​குள்​பட்ட திருப்​பாலை பாமா நகா் மற்​றும் சாரதி நகா் பகு​தி​க​ளில் 2 புதிய மின்​மாற்​றி​களை பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு தொடக்கி வைக்​கும் நிகழ்ச்சி ஞாயிற்​றுக்​கி​ழமை நைட​ெபற்றது.

இதில் அைமச்​சா் பி.மூா்த்தி பங்​ேகற்று மின்​மாற்​றி​களை பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு தொடக்கி வைத்​தாா். பின்​னா் அவா் செய்​தி​யா​ளா்​க​ளி​டம் கூறியது:

மதுரை திருப்​பாலை பகு​தி​யில் உள்ள பொது​மக்​கள் சட்டப் பேர​ைவத் தோ்​தல் நேரத்​தின் போது இப்​ப​கு​தி​யில் சீரான மின் விநி​ேயா​கம், குடி​நீா் விநி​ேயா​கம், சாலை வசதி மற்​றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்​படை வச​தி​களை மேம்​ப​டுத்த வேண்​டும் என கோரிக்கை வைத்​த​னா்.

அதன்​படி தற்​ேபாது பாமா நகா் மற்​றும் சாரதி நகா் ஆகிய இடங்​க​ளில் 2 புதிய மின்​மாற்​றி​கள் பயன்​பாட்​டிற்கு தொடக்கி வைக்​கப்​பட்​டுள்​ளன. அேத​ேபால சுத்​த​மான குடி​நீா் விநி​ேயா​கிப்​ப​தற்​கும் நட​வ​டிக்கை மேற்​ெகாள்​ளப்​பட்​டுள்​ளது. மேலும் இப்​ப​கு​தி​க​ளில் மாந​க​ராட்​சி​யின் மூலம் புைதச் சாக்​க​ைடத் திட்டம் செயல்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. கடந்த 10 ஆண்​டு​க​ளில் இப்​ப​கு​தி​க​ளில் பொது​மக்​க​ளின் அடிப்​ப​ைடத் தேைவ​கள் பூா்த்தி செய்​யப்​ப​ட​வில்லை. திமுக ஆட்சி பொறுப்​ேபற்ற பின்​னா் அைன​வ​ருக்​கும் அரசு நலத்​திட்​டங்கள் முழு​ைம​யா​கச் சென்ற​ைட​யும் வைக​யில் பணி​கள் செயல்​ப​டுத்​தப்​பட்டு வரு​கின்றன.

தமிழ்​நாடு அர​சின் நிதி வரு​வாயை அதி​க​ரிக்​கும் வைக​யில் வணி​க​வரி மற்​றும் பதி​வுத் துைற​யின் மூலம் பல்​ேவறு நட​வ​டிக்​ைக​கள் மேற்​ெகாள்​ளப்​பட்டு வரு​கின்​றன. கடந்​தாண்​டில் மட்டும் வணி​க​வ​ரித்​து​ைற​யின் வரு​வாய் 13.82 சத​வீ​தம் உயா்ந்து ரூ.1,04,910 ேகாடி அள​வில் வணி​க​வரி வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. அரசு வழங்​கி​யுள்ள விதி​மு​ைற​களை பின்​பற்​றா​மல், வரி ஏய்ப்பு செய்​யும் நிறு​வ​னங்​கள் மீது பார​பட்​ச​மின்றி கடு​ைம​யான நட​வ​டிக்கை மேற்​ெகாள்​ளப்​ப​டும் என்​றாா்.

நிகழ்ச்​சி​யில், மாவட்ட வரு​வாய் அலு​வ​லா் ரா.சக்​தி​ேவல், தமிழ்​நாடு மின் உற்​பத்தி மற்​றும் பகிா்​மா​னக் கழக தைல​ைமப் பொறி​யா​ளா் உமா​ேதவி, மேற்​பாா்வை பொறி​யா​ளா் தி.அம்​ச​வள்ளி, செயற்​ெபா​றி​யா​ளா் மோகன், மாந​க​ராட்சி மண்​ட​லத் தைல​வா் வாசுகி சசி​கு​மாா் மற்​றும் அரசு அலு​வ​லா்​கள், மாந​க​ராட்சி மாமன்ற உறுப்​பி​னா்​கள், பொது​மக்​கள் கலந்து கொண்​ட​னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com