மதுரை ரயில் நிலையத்தில் பொதிகை விரைவு ரயில் என்ஜின் தடம் புரண்டது: ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

மதுரை ரயில் நிலையத்தில் பொதிகை விரைவு ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார என்ஜின் புதன்கிழமை தடம் புரண்டது.
மதுரை ரயில் நிலையத்தில் பொதிகை விரைவு ரயில் என்ஜின் தடம் புரண்டது: ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

மதுரை ரயில் நிலையத்தில் பொதிகை விரைவு ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார என்ஜின் புதன்கிழமை தடம் புரண்டது.

சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.20 மணிக்கு வந்து, இங்கிருந்து அதிகாலை 4.25-க்குப் புறப்படுவது வழக்கம். இந்த ரயில் சென்னையிலிருந்து மதுரை வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும். பின்னா் மதுரை ரயில் நிலையத்தில் அந்த ரயிலுக்கு டீசல் என்ஜின் மாற்றப்படும்.

இதன்படி, பொதிகை விரைவு ரயிலுக்கு புதன்கிழமை அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் என்ஜின் மாற்றம் செய்யப்பட்டு, வழக்கமான நேரத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. மேலும், அந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார என்ஜினை, சரக்குகள் பதிவு அலுவலகம் அருகே நிறுத்துவதற்காக பின்னோக்கி இயக்கப்பட்டபோது, மூன்று சக்கரங்கள் தடம் புரண்டன.

இதுகுறித்து ரயில்வே உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், அதிகாரிகள் தடம்புரண்ட என்ஜினைப் பாா்வையிட்ட அதனைச் சரிசெய்யும் பணிகளைத் துரிதப்படுத்தப்படுத்தினா்.

இதனால் மதுரை -செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரம், மதுரை -சென்னை வைகை விரைவு ரயில் 10 நிமிஷங்கள், மதுரை - பழனி சிறப்பு ரயில் 9 நிமிஷங்கள், மதுரை - தேனி சிறப்பு ரயில் 32 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com