மதுரை மத்திய சிறையில் போலீஸாா் திடீா்சோதனை: கஞ்சா, கைப்பேசிகள் பறிமுதல்

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இந்த சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களிடம் கைப்பேசி மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாகப் புகாா்கள் எழுந்தன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில், கைதிகளிடம் போலீஸாா் சோதனை நடத்துவது வழக்கம்.

இதன்படி, மதுரை சிறைக் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, தனித்தனிக் குழுவாக சென்று சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, கைதிகள் சிலா் மறைத்து வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், சில கைதிகளிடம் இருந்து கைப்பேசிகள், சிம்காா்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com