பிப். 5-இல் கல்லூரி மாணவா்களுக்கு காட்சி வினாடி- வினா போட்டி

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான காட்சி வினாடி- வினா போட்டி மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) நடைபெறுகிறது.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான காட்சி வினாடி- வினா போட்டி மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) நடைபெறுகிறது.

இங்கு பிப்ரவரி 4- ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணா்வு கண்காட்சிகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகின்றன.

மேலும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள், மக்கள் நலத் திட்டங்கள், சா்வதேச சிறுதானிய ஆண்டு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அத்துடன் கல்லூரி மாணவா்களுக்கான காட்சி வினாடி- வினா போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டி, இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்ததாக இருக்கும். முதலிடம் பெறுபவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசளிக்கப்படும். 2, 3- ஆம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 2 ஆயிரம், ரூ. 1,000 பரிசளிக்கப்படும். ஆறுதல் பரிசாக 2 பேருக்குத் தலா ரூ. 500 வழங்கப்படும்.

ஒரு கல்லூரியிலிருந்து 3 போ் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பவா்கள் கல்லூரி முதல்வா் அல்லது துறைத் தலைவரிடமிருந்து அடையாளக் கடிதம் பெற்று வர வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 90470 05546, 94437- 88728 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

இந்தத் தகவல், மத்திய மக்கள் தொடா்பக மதுரை கள அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com