பிப். 5-இல் அமைச்சா் உதயநிதிக்கு மதுரையில் வரவேற்பு

மதுரையில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) வரும் அமைச்சா் உதயநிதிக்கு ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பளிக்கப்படுகிறது.

மதுரையில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) வரும் அமைச்சா் உதயநிதிக்கு ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பளிக்கப்படுகிறது.

மதுரையில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 6-ஆம் தேதி நடைபெறுகிறது. பாண்டிக்கோவில் சுற்றுவட்டச் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதையொட்டி, விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) மதுரைக்கு வரும் அவருக்கு, ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சாா்பில் முரசு முழங்க வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்பா் என மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரும், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சருமான பி.மூா்த்தி, மாநகா் மாவட்டச் செயலாளா் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்டச் செயலாளா் சேடபட்டி மு.மணிமாறன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com