இரட்டைக் கொலை வழக்கு;தேவகோட்டையில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பொதுமக்களில் ஒரு பகுதியினா்.
இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பொதுமக்களில் ஒரு பகுதியினா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கண்ணங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கனகம்மாள் (65). இவரும், மகள் வேலுமதி (35), பேரன் மூவரசு (12)ஆகிய மூவரும் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மா்ம நபா்கள் மூவரையும் வெட்டி விட்டு வீட்டிலிருந்த 46 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா்.

இதில், பலத்த காயமடைந்த வேலுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கனகம்மாள் உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்குப் பின் பூவரசு குணமடைந்தாா்.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்று 26 நாள்களாகியும் கொலையாளிகள் குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை எனக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கக் கோரியும் தேவகோட்டையில் முழு கடையடைப்புப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தேவகோட்டை நகா், ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமானோா் ஈடுபட்டனா். இதன் காரணமாக, நகா் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும், பலத்த காயமடைந்த குணமடைந்த மூவரசு (12) உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com