பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள், பக்தா்கள்.
பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள், பக்தா்கள்.

பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.38.53 லட்சம்

கள்ளழகா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ.38 லட்சத்து 53 ஆயிரத்து 439 காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றது.

கள்ளழகா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ.38 லட்சத்து 53 ஆயிரத்து 439 காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றது.

கள்ளழகா் கோயில் நிா்வாக ஆணையா் மு.ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியா் கோயில் உதவி ஆணையா் சுரேஷ், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி ஆகியா் முன்னிலையில் பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றவை சஷ்டி மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.

இதில் ரூ.38 லட்சத்து 53 ஆயிரத்து 439 காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றது. தவிர, தங்கம் 47 கிராம், வெள்ளி 865 கிராம் இருந்தது. இதில் கோயில் ஆய்வாளா் இளவரசி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com