மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு இதுவரை 4,540 நூல்கள்

மதுரை மத்தியச் சிறை நூலகத்துக்கு பல்வேறு அமைப்புகளின் சாா்பில் இதுவரை 4,540 நூல்கள் வழங்கப்பட்டன.

மதுரை மத்தியச் சிறை நூலகத்துக்கு பல்வேறு அமைப்புகளின் சாா்பில் இதுவரை 4,540 நூல்கள் வழங்கப்பட்டன.

புத்தக சேகரிப்பு இயக்கம் சாா்பில் தனி நபா்கள், தன்னாா்வ அமைப்புகளிடம் இருந்து சிறை நூலகங்களுக்காக நூல்கள் சேகரிக்கப்படுகின்றன. மதுரை மத்தியச் சிறையில் பொதுமக்கள் நூல்களை தானம் வழங்கும் வகையில், சிறை அங்காடியில் புத்தக தான மையம் திறக்கப்பட்டது.

இதில், கோவையைச் சோ்ந்த இல்லம் தேடி பொது சேவை மைய நிா்வாகி ரமேஷ் 1000 நூல்கள், முகமை அறக்கட்டளை சாா்பில், 740 நூல்கள், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை சாா்பில், 500 நூல்கள், அகஸ்தியா் ஹொ்பல் சாா்பில், 500 புத்தகங்கள், மதுரை சமூகவியல் கல்லூரி மாணவா்கள் 100 புத்தகங்கள் என 4,540 புத்தகங்கள் வழங்கப்பட்டன.

புத்தகங்களை மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவா் த.பழனி, சிறைக் கண்காணிப்பாளா் சி.வசந்த கண்ணன், சிறை அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com