காந்தி அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், விசாகா ஓளஷதாலயாவின் மருத்துவா் கி. ஹரிணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘மன , உடல் ஆரோக்கியத்திற்கான இயற்கை உணவுகள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

வாழைப்பூ , தென்னங்குருத்து , வெந்தயக் களி ஆகியவை உடல்நலனுக்கு நன்மை பயப்பவை. சிறுதானியங்களைப் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றாா் அவா்.

திண்டுக்கல் பெஸ்வா யோகா, இயற்கை மருத்துவமனையின் இயக்குநா் எ.இ. தேவராஜா ‘இயற்கை குளியல்களான மண் குளியல், நீா் குளியல், மழை நீா் குளியல், வாழை இலை குளியல் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்துப் பேசினாா். மேலும், அது தொடா்பான பயிற்சியையும் வழங்கினாா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு தியானம், யோகாசனப் பயிற்சிகள், சுக்கு காபி, பயறு வகைகள், பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி அலுவலா் ஆா். தேவதாஸ், இயற்கை வாழ்வியலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

இதில், இயற்கை வாழ்வியல் நிபுணா் பாஸ்கரன், மருத்துவா் வேத ஹா்சினி, ஆண்டி, தனபாண்டி, யோகா மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமுக்கு ஏற்பாடுகளை அருங்காட்சியகச் செயலா் கே. ஆா். நந்தாராவ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com