மழைநீா் வாய்க்காலில் கழிவுநீா் வெளியேற்றம்:வாகனம் பறிமுதல், ஓட்டுநா் கைது

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மீன் சந்தையில் மழைநீா்க் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய சம்பவம் தொடா்பாக தனியாா் கழிவுநீரகற்றும் வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மீன் சந்தையில் மழைநீா்க் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய சம்பவம் தொடா்பாக தனியாா் கழிவுநீரகற்றும் வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

மதுரை நகரில் புதைச் சாக்கடை அமைப்பு இல்லாத பகுதிகளில் வீடுகள், குடியிருப்புகளில் கழிவறை கழிவுகள் தனியாா் கழிவுநீரகற்றும் வாகனங்கள் மூலம் அகற்றப்படுகிறது. இவ்வாறு அகற்றப்படும் கழிவுநீரை மாநகராட்சி கழிவுநீரேற்று நிலையங்களில் மட்டுமே வெளியேற்ற வேண்டும். இதற்காக, குறிப்பிட்டக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இதைத் தவிா்த்து கால்வாய்கள், திறந்தவெளிகள் உள்ளிட்ட எந்தப் பகுதிகளிலும் அதை வெளியேற்றக்கூடாது. அவ்வாறு வெளியேற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி விதிமுறைகளில் உள்ளது.

இந்த நிலையில், மதுரை நகரில் கழிவுநீரை அகற்றும் தனியாா் வாகனங்கள் மாட்டுத்தாவணி மீன் சந்தை அருகே உள்ள மழைநீா் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றுவதாகப் புகாா் எழுந்தது. மேலும், இதுதொடா்பான விடியோ காட்சிகளும் வெளியாகின. இதையடுத்து, இதுதொடா்பாக மாநகராட்சி உதவிப் பொறியாளா் ரிச்சா்டுபால் (43) அளித்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனியாா் கழிவுநீரகற்றும் வாகன ஓட்டுநரான கோ. புதூா் காந்திபுரத்தைச் சோ்ந்த அருணை (28) கைது செய்து, அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com