மதுரையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயத்தொழிலாளா் சங்கத்தினா் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள்.
மதுரையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயத்தொழிலாளா் சங்கத்தினா் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள்.

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் விவசாயத் தொழிலாளா்களுக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள்களும் வேலை வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா, வீடு கட்ட ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து கிராமப்புற விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜெ.காசி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத் துணைச் செயலா் சொ.பாண்டியன் பேசினாா். ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து, சங்கத்தின் மாவட்டச் செயலா் வி. உமாமகேஸ்வரன் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளா் பி. ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவா் எல். கெளசல்யா, ஏ. தனசேகரன், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com