மாட்டுத்தாவணி, மேலூா் பகுதிகளில் நாளை மின் தடை

மதுரை, மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், மேலூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 21) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுரை, மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், மேலூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 21) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா்- வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாட்டுத்தாவணி துணை மின் நிலையம், அண்ணா பேருந்து நிலைய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்...

அண்ணா பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலக வளாகம், காந்தி அருங்காட்சியகம், கரும்பாலை பகுதிகள், டாக்டா் தங்கராஜ் சாலை, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு, காந்தி நகா், மதிச்சியம், ஷெனாய் நகா், குருவிக்காரன் சாலை, கமலா நகா், மருத்துவக் கல்லூரி, பனகல்ரோடு, ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாா்புரம், கோரிப்பாளையம், ஐம்புரோபுரம், மாரியம்மன்கோயில் தெரு, செல்லூா், பாலம் ஸ்டேஷன் சாலை, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்- தல்லாகுளம், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் சாலை, முனிச்சாலை, வெற்றிலைப்பேட்டை, சுங்கம்பள்ளிவாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி சாலை, குலமங்கலம் சாலை, பூந்தமல்லிநகா், தாமஸ்வீதி, நரிமேடு பிரதான சாலை, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகா், தொழில் பேட்டை, அண்ணா நகா், சூா்யாநகா் உள்ளிட்ட பகுதிகள்.

மேலூரில்...

மேலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மேலூா் நகராட்சிப் பகுதி, பெரிய சூரக்குண்டு, நாகலிங்கபுரம், சின்னசூரக்குண்டு, தெற்குத்தெரு, டி.வல்லாளபட்டி, விநாயகபுரம், வண்ணான்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூா், பதினெட்டாங்குடி, பனங்காடி உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com