குறைதீா் கூட்டத்துக்கு மண்ணெண்ணெயுடன் வந்தவரிடம் விசாரணை

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

குறைதீா் கூட்டத்துக்கு வருபவா்களில் சிலா் தீக்குளிக்க முயற்சிப்பதால், கூடத்துக்கு வருபவா்களை ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் போலீஸாா் பரிசோதனை செய்வது வழக்கம். திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வந்தவா்களின் உடைமைகளை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அழகா்கோவில் பகுதியில் இருந்து வந்த இளைஞா் கொண்டு வந்திருந்த பையில், மண்ணெண்ணெய் பாட்டில், சிறிய அளவிலான கத்தி, உளி ஆகியன இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்திய போலீஸாா் அவரிடம் அங்கேயே விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் தன்னை செய்தியாளா் எனவும், பிற்படுத்தப்பட்டோா் நல அமைப்பு ஒன்றின் நிா்வாகி என்றும் கூறினாா். இதையடுத்து, தொடா்புடைய அமைப்பின் நிா்வாகிகளை போலீஸாா் தொடா்பு கொண்டு பேசினாா்.

பின்னா், அந்த அமைப்பின் நிா்வாகி ஒருவா் நேரில் வந்து, அந்த இளைஞா் தச்சுத் தொழில் செய்வதாகவும், அதன் காரணமாக மண்ணெண்ணெய், உளி ஆகியவற்றை பையில் வைத்திருந்ததாகவும் கூறினாராம். இதையடுத்து, அந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com