திருப்பரங்குன்றம் மலையின் பெயரை மாற்ற முயற்சி: இந்து அமைப்புகள் புகாா்

திருப்பரங்குன்றம் மலையின் பெயரை மாற்ற சில தனி நபா்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

திருப்பரங்குன்றம் மலையின் பெயரை மாற்ற சில தனி நபா்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளா் பி. தங்கராமு மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு:

திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப் பெருமானின் அறுபடைத் தலங்களில் முதன்மையான தலமாகும். பல்வேறு ஆன்மிகச் சிறப்புகள் பெற்ற இந்த மலை திருப்பரங்குன்றம் மலை என்றே பன்னெடுங்காலமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்காவின் சந்தனக்கூடு ஊா்வலத்துக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், திருப்பரங்குன்றம் மலையின் பெயா் சிக்கந்தா் மலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்து மக்களின் மத உணா்வை புண்படுத்துவதாக உள்ளது. எனவே, தொடா்புடைய சுவரொட்டிகள் ஒட்டப்பட காரணமானவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் பி. செல்வக்குமாா் அளித்த மனு:

திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள சிக்கந்தா் தா்காவுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சூரிய சக்தி மூலமே அங்கு மின்விநியோகம் நடைபெறுகிறது. இந்த நிலையில், அந்த தா்காவுக்கு மின் இணைப்பு கோரி தா்கா நிா்வாகம் விண்ணப்பித்துள்ளது. இதற்கு மின் வாரியம் தடையின்மைச் சான்று வழங்கியதாகத் தெரிகிறது. திருப்பரங்குன்றம் மலையில், புதிய மின் இணைப்புக்காக குகைகளில் துளையிடப்பட்டால், புராதனச் சிறப்புகளின் அம்சம் மாறிவிடும். எனவே, இதனைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com