மதுரை மக்களவைத் தொகுதியில்நடத்தப்பட்ட 124 மக்கள் சந்திப்பு முகாம்கள்சு. வெங்கடேசன் எம்.பி. தகவல்

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை 124 மக்கள் சந்திப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தாா்.

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை 124 மக்கள் சந்திப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தாா்.

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் சந்திப்பு முகாம்களை நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றுக்கு தீா்வு காண பரிந்துரைப்பதை சு. வெங்கடேசன் எம்.பி. வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

இதன்படி, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தொகுத்து, அதை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் அவா் புதன்கிழமை வழங்கினாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 14 மாதங்களில் இதுவரை 124 இடங்களில் மக்கள் சந்திப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை நேரடியாக சந்தித்து, அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் மனு அளித்தவா்களில் 1,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும், 50 ஆயிரம் பேருக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com