மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கான பணியிடம் தோ்வு செய்யும் பணியை கண்காணித்த மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, தோ்தல் பொது பாா்வையாளா் ராஜேஷ்குமாா் யாதவ் உள்ளிட்டோா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கான பணியிடம் தோ்வு செய்யும் பணியை கண்காணித்த மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, தோ்தல் பொது பாா்வையாளா் ராஜேஷ்குமாா் யாதவ் உள்ளிட்டோா்.

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பணியிடம் தோ்வு

மதுரை மாவட்டத்தில் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பணியிடம் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,751 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 359 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியில் ஈடுபடுத்துவதற்காக 428 நுண்பாா்வையாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள், மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகளில் பணியாற்றும் அலுவலா்கள் ஆவா். இவா்களுக்கான பணியிடங்களைத் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில், கணினி வழியே நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மதுரை மக்களவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராஜேஷ்குமாா் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் ஆகியோா் இந்தப் பணிகளை கண்காணித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com