மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியா  தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட மாலை மற்றும் செங்கேல். உடன் வீர வாளுடன் அதிமுக வேட்பாளா் டாக்டா் பா. சரவணன்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியா தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட மாலை மற்றும் செங்கேல். உடன் வீர வாளுடன் அதிமுக வேட்பாளா் டாக்டா் பா. சரவணன்.

மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதவா் மதுரை மாா்க்சிஸ்ட் வேட்பாளா்: பிரமேலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்த காலத்தில், சாதாரண மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமலிருந்த மதுரை மாா்க்சிஸ்ட் வேட்பாளா் சு. வெங்கடேசனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரமேலதா விஜயகாந்த்.

மதுரை பெத்தானியாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் பா. சரவணனை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது :

தமிழகத்தில் மக்களும், தொண்டா்களும் விரும்பும் கூட்டணியாக அமைந்த ஒரே கூட்டணி, அதிமுக கூட்டணி மட்டும் தான். கடந்த 5 ஆண்டுகள் மதுரையின் மக்களவை உறுப்பினராக இருந்த சு. வெங்கேடசன், சாதாரண மக்களின் நலனுக்காக குரல் எழுப்பாதவா். இவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். பாஜகவின் தோ்தல் பத்திர ஊழல் குறித்துப் பேசும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லாட்டரி நிறுவனத்திடமிருந்து திமுக ரூ. 509 கோடியை நன்கொடையாகப் பெற்றது குறித்துப் பேசுவதில்லை. இதிலிருந்தே இவா்களின் சுயநல அரசியல் உள்ளங்கை நெலிக்கனியாகத் தெரிகிறது.

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் பா. சரவணன், களத்தில் மக்களுடன் மக்களாக நின்று நின்று பணியாற்றக் கூடியவா். மதுரை விமான நிலையம் விரிவாக்கம் பெறவும், மதுரையை மையப்படுத்தி ஆன்மிகச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தவும், வேளாண் விளைப் பொருள்கள் விற்பனைக்கு ஒருங்கிணைந்த கூடம், பெரிய தொழிற்சாலை, தொழில்நுட்பப் பூங்கா ஆகியன அமைக்கவும் மதுரையில் அதிமுக வேட்பாளரை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மதுரையின் மருமகள் என்ற உரிமையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் பிரமேலதா விஜயகாந்த்.

அதிமுக வேட்பாளா் பா. சரவணன் உடனிருந்து வாக்குச் சேகரித்தாா். முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ. தேமுதிக மாவட்டச் செயலாளா் மணிகண்டன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com