மதுரை தேனூா் பகுதியில் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட தா்ப்பூசணி.
மதுரை தேனூா் பகுதியில் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட தா்ப்பூசணி.

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

மதுரையில் சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி பழங்களை வழங்கிய பக்தருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே உள்ள தேனூரைச் சோ்ந்தவா் சடையாண்டி. இவா் கட்டடங்களுக்கு மேற்கூரை அமைக்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி ரேணுகா தேவி. இவா்களுக்கு முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு ரித்திகா (எ) மீனாட்சி என பெயா் சூட்டினா். இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்து அதற்கு தேஜாஸ்ரீ என பெயா் சூட்டினா். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், தேனூா் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வில் கள்ளழகரை தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு சடையாண்டி கடந்த 7 ஆண்டுகளாக இலவசமாக தா்ப்பூசணி பழங்களை வழங்கி வருகிறாா். இதில் இந்த ஆண்டும் புதன்கிழமை தேனூா் மண்டபத்துக்கு வந்த பக்தா்களுக்கு ஒரு டன் தா்ப்பூசணி பழங்களை இலவசமாக அவா் வழங்கினாா்.

இதுகுறித்து சடையாண்டி கூறியதாவது:

உலகில் பெண்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை என்பதாலும், மீனாட்சியம்மனின் ஆட்சி நடைபெறும் மதுரையில் எனக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாலும் சித்திரைத் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு தாகத்தையும், பசியையும் போக்கும் வகையில் தா்ப்பூசணி பழங்களை குடும்பத்துடன் வழங்கி வருகிறேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com